1 -2 -3 -4 -5- 6 -7- 8- 9

 

 

உனக்காக நான் காதிருந்தேன்

உனக்காக நான் காதிருந்தேன்
உன்வரவை எதிர்பார்திருந்தேன்
உன்னை நான் கண்டவுடன்
உன்னிடதில் நான் ஓடிவந்தேன்

அருகினில் நான் வந்தேன்
அன்பே அது நீ இல்லை-என்
அன்புக்கு சொந்தமானவரை
அறியேன் நான் இன்று

இதழ் கொடுதேன் நான் -நீ
இதமாக படித்து கொள்ள
இன்னொருதன் படிப்தற்கு அல்ல
இதயமோ இன்று வெடித்தடா

மயிர்களை இழந்தால் நான்
மடிவேன் என்று நீ அறிவாய்
மரிக்கின்றேன் இன்று உன்னால்
மனதினில் வலி தாங்காமல்

 

உன்னை நான் விரும்பியிருந்தேன்

உன்னை நான் விரும்பியிருந்தேன்
உயிராக மனதில் நினைத்திருந்தேன்
உன்னை நீ மாற்றாமல் - இன்று
உன்னால் நான் பிரிகிறேன்

உனக்கு மட்டும் ஒளி கொடுக்க வந்தேன்
உருக்கே விளக்காக நீ மாற்றிவிட்டாய்
உருக்குலைந்து நான் போகுமுன் இன்று
உன்னையே விட்டு செல்கிறேன்

உடலில் உயிர் உள்ளவரை
உன்னை நான் மறவேன்
உனக்காக என்றும் வேண்டி
உள்ளதில் நிதம் தொழுவேன்

சினேகிதியே

விழலைப் பருவம் தொடக்கம்
விட்டுப்பிரியாது இதயத்துடன்
ஒட்டி வந்த உறவு - உன்
பிரிவினால் என்னிதயம் -இங்கே
ஆற்றுவாரின்றி அழுகிறதடி...

எவ்வளவு இனிமையான நாட்கள்
நாம் பழகிய அந்தப்
பள்ளிப் பருவம்
பசுமரத்தாணிபோல் - என்
நினைவுகளில் இன்னும் இன்னும்
எங்கே சென்றாய்- உன்
நினைவுகளுடன் காத்திருக்கிறேன்
என்னை மறந்து
நீ வரும் நாளுக்காய்.........

என்ன அழகு

மஞ்சள் அழகா மாதுளம் பூவழகா

கொஞ்சல் அழகா கோபுரம் தானழகா

வஞ்சி அழகா வாய்வெடித்த பூவழகா

குஞ்சம் அழகா கூந்தல் மலரழகா - இல்லை

பஞ்சமில்லா மஞ்சம் அழகா மிஞ்சும் அழகு

மெருகூட்டும் அழகெதென்றால் - வெள்ளை

நெஞ்சம் அழகு நெடுநாட் காதலித்தும்

அஞ்சுதற்கு அஞ்சுகின்ற வஞ்சமில்லா

நெஞ்சமே அழகென்பேன் யான்.

சாதம் இடுகின்ற சந்தனக்கையழகா - அவள்

பாதம் படுகின்ற பக்குவப் புல்லழகா

நாதம் கொடுக்கின்ற நங்கை குரலழகா

பாதம் நோகாமல் பக்குவமாய் நடை நடந்து

தோதாய் வளர்ந்திருக்கும் கார்குழலை வாரிவிட்டு

கோதிப்பூ முடித்து காதலாள் காத்திருந்தால்

என்ன அழகு மின்னும் அழகு

எல்லாமே அழகென்பேன் நான்

எனது தேசத்து மண்ணில் சாவதே

எனது தேசத்து மண்ணில் சாவதே
எனக்குப் போதும்
அதற்குள் புதைக்கப்படுவதும்
எனக்குப் போதும்
உருகி
அந்த மண்ணுடன் கலந்து
மறைந்து போவதும்
எனக்கப் போதும்
எனது தேசத்தின் புனித முற்றத்தில்
ஒரு கைப்பிடியளவு புழுதியாய்
ஒரு புல்லின் இதழாய்
ஒரு பூவாய் இருப்பதும்
எனக்குப் போதும்.?

உனக்காக நான் காதிருந்தேன்

உனக்காக நான் காதிருந்தேன்
உன்வரவை எதிர்பார்திருந்தேன்
உன்னை நான் கண்டவுடன்
உன்னிடதில் நான் ஓடிவந்தேன்

அருகினில் நான் வந்தேன்
அன்பே அது நீ இல்லை-என்
அன்புக்கு சொந்தமானவரை
அறியேன் நான் இன்று

இதழ் கொடுதேன் நான் -நீ
இதமாக படித்து கொள்ள
இன்னொருதன் படிப்தற்கு அல்ல
இதயமோ இன்று வெடித்தடா

மயிர்களை இழந்தால் நான்
மடிவேன் என்று நீ அறிவாய்
மரிக்கின்றேன் இன்று உன்னால்
மனதினில் வலி தாங்காமல்

உன் அன்பு

அன்பின் காதல் கோயிலே
காலமெல்லாம் காத்திருந்து
உன்னை நான் தேர்ந்தெடுத்தேன்
ஆனால் இன்று கடல் பிரித்து விட்டதே
உன்னை நினைக்கையில் என்
கண்கள் கண்ணீராகப் பெருகுகிறதே
உள்ளம் எல்லாம் உருகுதே
உன்தன் அன்பிற்காகத் துடிக்குதே
என்றுதான் உன் அன்பு முகம் காண்பேனோ
அன்றுதான் ஆறுதல் காண்பேன்
என்றுதான் உன் அன்பு முகம் காட்டி
எனக்கு புத்துயிர் கொடுப்பாயோ?

 

 

1 -2 -3 -4 -5- 6 -7- 8- 9


Kathaldesam
   
 
Kathalmp3desam:::vinoo::::